சுக்கிர யோகம்

ஒரு ஜாதகத்தில் மேஷ ராசியில் சூரியன் இருந்து, லக்னத்திற்கு 11-ஆம் பாவத்தில் அது இருந்தால், அதே ஜாதகத்தில் கடக ராசியில் குருபகவான் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் மன்னரைப்போல வாழ்வார்கள். பெயர், புகழ் இருக்கும்.

Advertisment

விலாச ஹானி யோகம்

ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவத்தில் மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய ராசிகள் இருந்தால், அதில் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு மனைவியால் கஷ்டங்கள் இருக்கும். பண கஷ்டம் இருக்கும். தொழிலில் பிரச்சினை இருக்கும்.

Advertisment

சூன்ய யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு அதிபதி பாவ கிரகத்துடன் 6, 8, 12 ஆகிய பாவங்களில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் 20 வயதிலிருந்து  30 வயதிற்குள் பல நோய்களின் பாதிப்பிற்கு ஆளாவார்கள். 

இலாக்யா சர்ப்ப யோகம்

ஒரு ஜாதகத்தில் மூன்று கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். பாவச் செயல்களைச் செய்வார்கள். தர்மத்திற்கு எதிராக பேசுவார்கள். கடவுளுக்கு எதிராக பேசுவார்கள்.

Advertisment

விபல யோகம்

ஒரு ஜாதகத்தில் நான்கு கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருந்து, 6-ஆம் பாவத்தில் அல்லது 8-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப் பவர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். வறுமை அவர்களைவிட்டு விலகாது.

ஆய யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சனி, 8-ஆம் பாவத்தில் ராகு, 4-ஆம் பாவத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் 36 வயதிற்குப்பிறகு, பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.

தாருண் யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் அல்லது 8-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால், 6-ஆம் பாவத்திலும் 12-ஆம் பாவத்திலும் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். தர்ம சிந்தனையுடன் இருப்பார்கள். பல பணியாட்கள் இருப்பார்கள். நல்லவர்களாக இருப்பார்கள்.

சந்திர யோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5-ஆம் பாவத்தில் இரண்டிற்கு மேலான பாவ கிரகங்கள் இருந்தால், அல்லது மூன்று சுப கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு வாத பித்த நோய் இருக்கும். தன் வாரிசைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்கள்.

செல்: 98401 11534